நாமக்கல் மாவட்டம் முழுவதும் 21 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு 4,534 மாணவ, மாணவிகள் எழுதினர்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் 21 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு 4,534 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 5 March 2022 11:54 PM IST (Updated: 5 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 21 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு 4,534 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று 21 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 4,534 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேசிய திறனாய்வு தேர்வு
மத்திய அரசு சார்பில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 12 மையங்கள், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 9 மையங்கள் என 21 மையங்களில் நடந்தது.
4,534 மாணவ, மாணவிகள் எழுதினர்
இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை, 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை என 2 பகுதியாக நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 2,586 பேரில் 2,545 பேர் கலந்து கொண்டனர். 41 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 2,007 பேரில் 1,989 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் பங்கேற்கவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 4,593 பேரில், 4,534 மாணவ, மாணவிகள் மட்டுமே தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர். 59 பேர் கலந்து கொள்ளவில்லை. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story