தர்ப்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு


தர்ப்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 March 2022 12:26 AM IST (Updated: 6 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகருக்கு தர்ப்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.

விருதுநகர், 
கோடைகாலத்தில் தர்ப்பூசணி பழங்கள் அதிகமாக விற்பனையாகும் நிலையில் விருதுநகருக்கு தற்போது தர்ப்பூசணி பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குமிடி பூண்டியில் இருந்து விருதுநகருக்கு தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் வந்துள்ளன. கடந்த மாதம் கிலோ ரூ.23 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்த விலையாக கிலோ ரூ.12-க்கும், சில்லறை விற்பனைக்கு ரூ. 18 ஆகவும் விலை உள்ளது. வரும் பங்குனி, சித்திரை மாதங்களில் தர்ப்பூசணி  பழங்கள் வரத்து அதிகரிக்கும் என்றும் விலையும் சற்று கூடுதலாகவே இருக்கும் என்றும்  விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தற்போதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தர்ப்பூசணி பழங்களை வாங்கி செல்வதை காண முடிந்தது.

Next Story