கீழடியில் சுடுமண் சில்லுவட்டுகள் கண்டெடுப்பு
கீழடியில் சுடுமண் சில்லுவட்டுகள்கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதில் அதிகமாக பாசி மணிகள் தான் கிடைத்து வருகின்றது. ஏற்கனவே பச்சை, சிவப்பு, ஊதா நிறத்தில் பாசிமணிகள் அதிகம் கிடைத்துள்ளன. பிறகு யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கிடைத்தது. தொடர்ந்து 2 குழியிலும் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டும் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் தெரியவந்துள்ளது. நேற்று தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது சிறுவர்கள், பெண்கள் விளையாடும் சுடுமண்ணால் ஆன சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குழிகள் ஆழமாக தோண்டப்படும் போது அதிகமாக பொருட்கள் கிடைக்க கூடும் எனவும் தெரிய வருகிறது.
Related Tags :
Next Story