2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 6 March 2022 12:27 AM IST (Updated: 6 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பாஸ்கர் (வயது 23). இவர் அடி தடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கங்கைகொண்டான் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று பாஸ்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், பாஸ்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை தச்சநல்லூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கொலை முயற்சி வழக்கில் தச்சநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார் (கிழக்கு), சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை ஆகியோர் போலீஸ் கமிஷனர் துரைக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். கமிஷனர் அதனை ஏற்று சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story