ராமேசுவரம் பகுதியில் 5-வது நாளாக மீன்பிடிக்க தடை


ராமேசுவரம் பகுதியில் 5-வது நாளாக  மீன்பிடிக்க தடை
x
தினத்தந்தி 6 March 2022 12:39 AM IST (Updated: 6 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் நேற்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் நேற்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

5-வது நாளாக..

 வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரத்தில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடலோரத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று கடல் இயல்பு நிலைக்கு வராததால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் பகுதியில் நேற்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 800-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் 80-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடல் நடுவில் மணல்திட்டு

 அதுபோல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல்சீற்றமாக காணப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க பாம்பன் தென் கடல் பகுதியில் நேற்று காலை கடலின் நடுவே பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலின் நடுவே புதிதாக மணல்திட்டு உருவானது போல் காட்சி அளித்தது. உள்வாங்கி காணப்பட்ட அந்த பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மீண்டும் கடல்நீர் ஏறிய நிலையில் சகஜ நிலைமைக்கு திரும்பியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக மீன்பிடித்தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் அதை சார்ந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணி பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story