பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது - ரூ.75 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்


பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது - ரூ.75 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2022 2:33 AM IST (Updated: 6 March 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

  பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் புலிகேசிநகருக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் இகே சுக்வு, ஜான் ஒபினா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 400 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

  இதுபோல ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதைப்பொருட்கள் விற்றதாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நெல்சன் என்பவரை கே.ஜி.ஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் புலிகேசிநகர், கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story