கோவில் திருவிழாவில் 170 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு
திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோவில் திருவிழாவில் 170 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோவில் திருவிழாவில் 170 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் திருவிழா
திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோவிலில் 86-வது அசைவ பிரியாணி திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவை நடத்துவார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் ஒரு சமுதாயத்தினர் விழா கொண்டாடவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில் நேற்று முன்தினம் இந்த திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் ஒரு வாரம் முன்பே காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
பக்தர்கள் ஊர்வலம்
இந்தநிலையில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூக்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி சிலைக்கு வைத்து பூஜை செய்தனர்.
இந்த திருவிழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அசைவ பிரியாணி
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 170 ஆடுகள் மற்றும் 300 சேவல்களை முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்தனர். நேற்று காலை பிரியாணி கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின் ஏற்கனவே அண்டாவில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணியை சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இ்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story