கருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
கருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்:
கருப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, பி.காமலாபுரம், ஆர்.சி.செட்டிப்பட்டி, ஏ.காமலாபுரம், பொட்டியபுரம், தட்டூர், எட்டிக்குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, அவுசிங்போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story