சேலத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்


சேலத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 6 March 2022 4:05 AM IST (Updated: 6 March 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

சேலம்:
சேலம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தன. இதில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கலந்து கொண்டு தடகள போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
பின்னர் அவர்களுக்கு 100, 200, 400, 500, 800, 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 12,14,16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ் என 5 பிரிவுகளாக ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில், ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் மோகன்குமாரமங்கலம், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ரவி, துணைத்தலைவர்கள் விமலன், செவ்வை அன்புக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story