10 டன் முருங்கைக்காய் கொள்முதல் வரத்து


10 டன் முருங்கைக்காய் கொள்முதல் வரத்து
x
தினத்தந்தி 6 March 2022 4:01 PM IST (Updated: 6 March 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

10 டன் முருங்கைக்காய் கொள்முதல் வரத்து

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி  நேற்று 50 விவசாயிகள் 10டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.45 முதல் ரூ.50 வரைக்கும், மரம் முருங்கை ரூ.40க்கும், கரும்புமுருங்கை ரூ.60க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story