வெட்டப்படும் மரங்கள்


வெட்டப்படும் மரங்கள்
x
தினத்தந்தி 6 March 2022 4:05 PM IST (Updated: 6 March 2022 4:05 PM IST)
t-max-icont-min-icon

வெட்டப்படும் மரங்கள்

எதையும் உடனே அழித்து விடலாம். விற்றும் விடலாம். ஆனால் அவற்றை உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்று அந்த பொருைள உருவாக்கியவர்களுத்தான் தெரியும். வளர்ச்சி என்றால் இயற்கையை அழித்துத்தான் வளர்ச்சி என்றால் அந்த வளர்ச்சி தேவையில்லை. ஒரு மரத்தை உருவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி உள்ளது. அந்த மரத்தால் மானுட சமுதாயம் மற்றும் இன்ன பல உயிரினங்கள் அடைந்திருக்கும் பயன்களுக்கு இல்லை எல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் கடைசி வரை மனித குலத்துக்காக அற்பணித்த மரங்களை வெட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. திருப்பூர் ராயபுரம் மெயின் ரோட்டில் மரங்கள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே மரம் வெட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சுகாதாரமற்ற சுகாதார வளாகம் 
அவினாசி  கைகாட்டிபுதூர் அம்பேத்கார் வீதியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால்  தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அவினாசி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொது சுகாதார வளாகத்தை சுத்தம் செய்ய முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பல்லடம் காளிநாதம்பாளையத்தில், அரசு நடுநிலைப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  பள்ளி வளாகத்தில் உள்ளே மின்கம்பத்தின் அடிப்பாகம் காரைகள் பெயர்ந்து, நேரமும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே அசம்பாவிதங்கள் நேரும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் இருந்து மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story