மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பல்லடம் அருகே கரடிவாவியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமை தாங்கினார்.காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு பேசும்போது வீட்டில் மாணவர்கள் செல்போனில் மூழ்கி விடுகிறீர்கள். இதனால் உங்களது மூளை, கண், உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே வேலை செய்கிறது. மற்றவை செயல்படுவதில்லை, நாளடைவில் கண்டிப்பாக அவைகளில் பாதிப்பு ஏற்படும். எனவே செல்போனை அவசியமின்றி பயன்படுத்தாதீர் என்றார். இந்த நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
-------
Related Tags :
Next Story