சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் 10-ந் தேதி இணைய வழியில் குறை தீர்ப்பு முகாம்
சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் 10-ந் தேதி இணைய வழியில் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகள், குறைகளை விரைவாக தீர்ப்பதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” (நிதி ஆப்கே நிகத்) என்ற பெயரில் குறை தீர்க்கும் முகாமை ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதி நடத்தி வருகிறது. அதன்படி சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு இணையவழி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர்கள், csd.rochennai1@epfindia.gov.in என்ற இ-மெயிலுக்கு ‘நிதி ஆப்கே நிகத்' என்று குறிப்பிட்டு பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், பணம் பெறுவதற்கான ஆணை, தங்கள் கோரிக்கைகள், குறைகளை அனுப்பி பதிவு செய்யவேண்டும். இணையதளம் மூலமாக குறைதீர்க்கும் முகாமில் பங்கு பெறுவதற்கான இணைப்பு (லிங்க்) சம்பந்தப்பட்டவர்களின் இ-மெயில் முகவரிக்கு அல்லது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.
சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story