ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு
தாராபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள பள்ளி மாணவியர் விடுதியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைத்து மாணவிகளை அழைத்து அனைவரிடம் சுமார் அரை மணி நேரம் அவர்களின் படிப்பு நேரம், தூங்கும் நேரம், படிக்கும் நேரங்கள் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அனாவசியமாக வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். இந்தப் பருவத்தில் நல்லபடியாக படித்து முன்னேறினால் அரசு பல்வேறு துறையில் ஏராளமான பணிகள் உள்ளன. இதனை மனதில் கொண்டு நன்றாக படித்து மேல் கல்வி கற்று அரசு பணியில் அனைவரும் சேர உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். பிறகு விடுதியை காப்பாளரிடம் பள்ளி முடிந்தவுடன் மாணவிகள் சரியான நேரத்திற்கு வருவதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். தரமான உணவு வழங்க வேண்டும் அதேபோல மாணவியரின் நலனில் அக்கரை செலுத்த வேண்டும் என்று காப்பாளரிகம் இடம் அறிவுறுத்தினார்.பிறகு பதிவேடுகளை சரியாக பராமரித்து வருவது குறித்து காப்பாளரிடம் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story