போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி:
தேனி போக்குவரத்து போலீஸ் சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகில் நேற்று நடந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த மக்களிடம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகளை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தனர். அவர்களுடன் சேர்ந்து போலீசாரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story