தடையை மீறி யாத்திரைக்கு முயன்ற இந்து அமைப்பினர் கைது


தடையை மீறி யாத்திரைக்கு முயன்ற இந்து அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 6 March 2022 6:51 PM IST (Updated: 6 March 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி யாத்திரைக்கு முயன்ற இந்து அமைப்பினர் கைது

ஊட்டி

ஊட்டி அருகே தேனாடுகம்பையில் ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் ராமர் ரத யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில் ராஷ்ட்ரிய இந்து மகா சபா தலைவர் வேலு தலைமையில் நிர்வாகிகள் அணிக்கொரை சாலையில் இருந்து தேனாடுகம்பையை நோக்கி தடையை மீறி இந்து விழிப்புணர்வு ராமர் ரத யாத்திரை செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் இந்துக்களுக்கு அநீதி நடப்பதாகவும், கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாகவும், மதமாற்றம் நடைபெறுவதாகவும் கோஷங்களை எழுப்பினர். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊட்டி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், துரைராஜ் மற்றும் போலீசார் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்கள் தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ராமர் ரத யாத்திரைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story