ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஊட்டியில் வார விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் வார விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
சிறந்த கோடை வாசஸ்தலமாக நீலகிரி திகழ்கிறது. வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் வருகை தந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அதன் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பெரணி இல்லம் மற்றும் பல்வேறு வகையான கள்ளிச்செடிகளை பார்வையிட்டனர். கல்லாகிய மரம், இந்திய வரைபடம், செடிகளை கொண்ட அலங்காரங்களை பார்வையிட்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். பூங்காவின் இயற்கை எழில் மிகுந்த அழகை பார்வையிட்டனர்.
படகு சவாரி
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் பூங்கா களை கட்டியது. அவர்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குன்னூர் பழவியல் நிலையத்தில் தயாரிக்கப்பட்ட பைனாப்பிள் ஜூஸ், திராட்சை ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா பூங்காவில் கோடை சீசனை வரவேற்கும் வகையில் ஒரு பகுதியில் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் மலர்களை தொட்டுப் பார்த்தனர். ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று மகிழ்ந்தனர். மாடத்தில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் குதிரை சவாரி செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் சூட்டிங்மட்டம் பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பைன்பாரஸ்ட் சுற்றுலா தலத்தில் காமராஜ் சாகர் அணை பின்னணியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சாலையோரங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story