ஸ்கூட்டர் மீது கார் மோதியது


ஸ்கூட்டர் மீது கார் மோதியது
x
தினத்தந்தி 6 March 2022 8:02 PM IST (Updated: 6 March 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டர் மீது கார் மோதியது

கூடலூர்

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகமாக காணப்பட்டது. கேரளா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்பட்டது. 

அப்போது ஊட்டியில் இருந்து கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் வந்தது. பின்னர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது மோதியது. தொடர்ந்து அங்குள்ள பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த ரென்னி என்ற வியாபாரியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டர், கார் சேதம் அடைந்தது. முன்னதாக கட்டுப்பாட்டை இழந்த காரை கண்டதும் பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.


Next Story