20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா
வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி சிறுபுள்ளி குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி சிறுபுள்ளி குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சிறுபுள்ளி குளத்தில், மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை விட்டு கிராம மக்கள் வளர்ப்பார்கள்.
பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடத்தி, குளத்தில் உள்ள மீன்களை கிராம மக்கள் போட்டிப்போட்டு பிடிப்பது வழக்கம். தாங்கள் பிடித்த மீன்களை வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் சிறுபுள்ளி குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் மீன்பிடி திருவிழாவும் நடைபெறவில்லை.
20 ஆண்டுகளுக்கு பிறகு...
இந்தநிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் நீர்வரத்து ஏற்பட்டு, மல்வார்பட்டி சிறுபுள்ளி குளம் நிரம்பியது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சார்பில் சிறுபுள்ளி குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.
இதற்கிடையே குளத்தில் விடப்பட்ட மீன்கள் வளர்ந்த நிலையில், மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று சிறுபுள்ளி குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கருப்பணசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது.
சமைத்து சாப்பிட்டனர்
இதனையடுத்து மல்வார்பட்டி, மாரம்பாடி, மரியமங்களபுரம், நாயக்கனூர், அய்யம்பாளையம், சவேரியார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் குளத்துக்குள் இறங்கி மீன்பிடித்தனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்வலை, கச்சா மற்றும் கூடை ஆகியவற்றை வைத்து மீன்களை போட்டிபோட்டு பிடித்தனர். பொதுமக்கள் வீசிய வலையில் கட்லா, கெண்டை உள்பட பல்வேறு வகை மீன்கள் சிக்கியது.
தாங்கள் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து, முதலில் இறைவனுக்கு படைத்தனர். பின்னர் அவர்கள் சாப்பிட்டனர். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் நீர்வளம் பெருகி, விவசாயம் செழிக்கும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story