மோட்டார் சைக்கிள்கள் மோதலில் ஆசிரியர் பலி
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் ராவணன் (வயது 52). இவர் பொன்னேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தனது மகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது மீஞ்சூர் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராவணன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராவணன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நாவல்குப்பம் கட்டுபுடி கிராமத்தில் வசித்து வந்த மகேஷ்(25).என்பவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீத்தஞ்சேரி சென்றார். அங்கு தனது உறவினர் சுப்பிரமணி(53) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கூனிபாளையம் பகுதியில் அபாயகரமான சாலை வளைவில் சென்ற போது நிலைதடுமாறிய வயல்வெளியில் விழுந்தார். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story