ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; புகழேந்தி பேட்டி
அ.தி.மு.க. தலைைம பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று புகழேந்தி தெரிவித்தார்.
வத்தலக்குண்டு:
எம்.ஜி.ஆர். புரட்சி சங்கம் சார்பில் வத்தலக்குண்டுவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை அவமரியாதை செய்ததாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, வக்கீல் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபவர்களிடம் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தபோது, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைதான போது ஏன் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அதற்கான காரணத்தை கட்சி தலைமை தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அ.தி.மு.க. தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும். அல்லது பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி அ.தி.மு.க. தொண்டர் ஒருவரை தேர்வு செய்து, தலைமை பொறுப்பை வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story