சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே பனைமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பனைமேடு கீழத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சூர்யா (வயது 21) என்பதும் அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பனைமேடு மெயின் ரோடு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் மனைவி கண்ணகி (60) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
Related Tags :
Next Story