வால்பாறை அருகே ஆட்டோவில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் அவலம்
வால்பாறை அருகே ரேஷன் கடை இல்லாததால் பொருட்கள் வாங்க ஆட்டோவில் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் ரேஷன்கடை அமைக்க பொதுமக்கள் வலுயுறுத்தி உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அருகே ரேஷன் கடை இல்லாததால் பொருட்கள் வாங்க ஆட்டோவில் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் ரேஷன்கடை அமைக்க பொதுமக்கள் வலுயுறுத்தி உள்ளனர்.
ரேஷன் கடைகள்
வால்பாறை பகுதியில் மொத்தம் 16 ஆயிரத்தி 887 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதார்களுக்கு ரேஷன் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்கள் வழங்க வால்பாறை நகரில் 2 ரேஷன் கடைகள், எஸ்டேட் பகுதியில் 17 சிந்தாமணி ரேஷன் கடைகளும், 27 மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடைகளும் உள்ளன.
இந்த ரேஷன் கடைகளுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை ஆகும். ஆனால் பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுரேஷன் கடைகள் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
கடை ஊழியர்கள் எப்போது வருவார்களோ அப்போதுதான் பொது மக்கள் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
குடியிருப்பு பகுதியில் இல்லை
இந்த நிலையில் வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை அவ்வப்போது காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று விட்டு சென்று விடுகிறது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் சேடல்டேம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ஆனால் அங்கு ரேஷன் கடை இல்லை. இதனால் அவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் பெரும்பாலானவர்கள் ஆட்டோவில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆட்ேடாவுக்கு வாடகைக்கு என்று தனியாக செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
எனவே இங்குள்ள குடியிருப்பு பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் அல்லது நடமாடும் ரேஷன் கடை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story