திருக்கோவிலூர் அருகே ரூ 12 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
திருக்கோவிலூர் அருகே ரூ 12 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் ரூ.12 லட்சம் செலவில் பைப்லைன் விஸ்தரிப்பு, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மேமாலூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜிதணிகாசலம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் தணிகாசலம் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story