தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி


தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 March 2022 10:32 PM IST (Updated: 6 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குவாரி தொழிலாளி 

திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அருகே உள்ள ஆவியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி (வயது 24). இவர் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகில் தங்கி இருந்து வீரப்பகவுண்டனூரில் உள்ள தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இதற்காக அவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்புவது வழக்கம். அதன்படி  குவாரியில் வேலையை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பினார். 

பரிதாப சாவு

அவர் சொக்கனூர்- வீரப்பகவுண்டனூர் சாலையில் உள்ள சொக்கனூர் அருகே வந்தபோது திடீரென்று சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரம் முறிந்து இருசக்கர வாகனத்தில் வந்த விஜயகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story