இளைஞர்களுக்கான கபடி போட்டி
கூழையார் மீனவ கிராமத்தில் இளைஞர்களுக்கான கபடி போட்டி நடந்தது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கூழையார் மீனவ கிராமத்தில் இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 87 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் வ.உ.சி. அணி முதல் பரிசையும், மடவாமேடு கிராம அணி இரண்டாம் பரிசையும், கிள்ளை கயல் அணி மூன்றாம் பரிசையும், வேட்டங்குடி ஜெய் பிரதர்ஸ் அணி ஆறுதல் பரிசையும் பெற்றன. நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்குதன், நற்குணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story