பணம், நகை பறிப்பு
பணம், நகை பறிப்பு
காரைக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா குருங்களூர் அருகே உள்ள மதகத்தை சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் தற்போது காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பாண்டி கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகள் சசி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்து வந்த கந்தர்வகோட்டை தாலுகா ஆண்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த தெய்வராஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்துள்ளார். அப்போது சசி, தெய்வராஜிற்கு 4 பவுன் நகையும், ரூ. 4 லட்சமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய தெய்வராஜ் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சசி தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் தான் கொடுத்த 4 பவுன் நகைகளையும், ரூ. 4 லட்சத்தையும் திருப்பி கேட்டுள்ளார். 4 பவுன் நகையை திருப்பி கொடுத்த தெய்வராஜ், பணத்தை சசியிடம் நேரடியாக கொடுப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் 2 பேர் சூடாமணிபுரத்திலுள்ள சசியின் தாய் லதா வீட்டிற்கு வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, லதாவின் உறவினர் பூபதி என்பவரை வாளால் வெட்டிவிட்டு ரூ. 29 ஆயிரம் மற்றும் லதா, பூபதி, லதாவின் தாய் கருப்பாயி ஆகியோர் அணிந்திருந்த 23 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story