கடும் குளிரில் சிக்கி தவித்தோம் உக்ரைனில் இருந்து மீண்டு வந்தது எப்படி? தர்மபுரி மாணவர் பேட்டி


கடும் குளிரில் சிக்கி தவித்தோம் உக்ரைனில் இருந்து மீண்டு வந்தது எப்படி? தர்மபுரி மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2022 11:11 PM IST (Updated: 6 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

கடும் குளிரில் சிக்கி தவித்தோம் என்றும் உக்ரைனில் இருந்து மீண்டு வந்தது எப்படி? என்றும் தர்மபுரி மாணவர் பேட்டி அளித்தார் .

நல்லம்பள்ளி:
கடும் குளிரில் சிக்கி தவித்தோம் என்றும் உக்ரைனில் இருந்து மீண்டு வந்தது எப்படி? என்றும் தர்மபுரி மாணவர் பேட்டி அளித்தார் 
மருத்துவ மாணவர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகம். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் கவுரிசங்கர் (வயது20). இவர் உக்ரைனில் வினிஸ்டியா நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷியா-உக்ரைன் இடையே போர் ஏற்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் தர்மபுரி மாணவர் கவுரிசங்கர் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் சென்னை வந்த அவர், அங்கிருந்து சொந்த ஊரான எர்ரப்பட்டிக்கு நேற்று வந்தார்.  அவரை பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
உணவின்றி அவதி
இதுகுறித்து மருத்துவ மாணவர் கவுரிசங்கர் கூறுகையில், கடந்த 10 நாட்களாக உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் காரணமாக 5 நாட்கள் அங்கிருந்த பதுங்கு குழியில் மாணவர்கள் பதுங்கி இருந்தோம். கடந்த 28-ந்தேதி உக்ரைனில் எல்லைப்பகுதியில் கடும் குளிரில் உணவின்றி அவதிப்பட்டோம். அங்கிருந்து நான் பல்கலைக்கழகம் மூலம் ருமேனியா வந்தேன். 
பின்னர் இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு வந்து, அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் சென்னைக்கு விமானத்தில் வந்தேன். அங்கு தங்களுக்கு உணவு தங்க இடம் தமிழக அரசு அளித்தது. இன்னும் ஏராளமாள மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் பதுங்கு குழியில் தவித்து வருகின்றனர். அவர்களையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து மருத்துவபடிப்பு தமிழகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார். 

Next Story