போராட்டம்
போராட்டம்
காரைக் குடி,
காரைக்குடிகண்ணதாசன் மணி மண்டபம் அருகே எல்.ஐ.சி. பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிடக்கோரி காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்க மதுரை கோட்டத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு குணசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து மாங்குடி எம்.எல்.ஏ. பேசுகையில், மத்திய அரசு ெரயில்வே, விமான போக்குவரத்து என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது கடைக்கோடி மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story