வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி


வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 6 March 2022 11:24 PM IST (Updated: 6 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி:
பேராவூரணி  புதிய பஸ் நிலையம் அருகே வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
சாலை விரிவாக்க பணிகள் 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 1 ஆண்டாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
துர்நாற்றம் 
பணிகள் முடிவடையாத நிலையில், மழைநீர் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நின்று, கழிவுநீராக மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  
வழிந்தோடும் கழிவுநீர் 
பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் நிரம்பி  முதன்மை சாலையில் வழிந்தோடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாக்கடை கழிவு நீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.  மேலும் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே முதன்மை சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றி, தொற்றுநோய் பரவுவதை தடுக்க வேண்டு்ம் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
---


Next Story