அவலூர்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் என மின்வாரிய செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, கோட்டப்பூண்டி, கப்ளாம்பாடி குந்தலம்பட்டு, கோவில்புரையூர், நொச்சலூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story