எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
கணியம்பாடியில் நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
அடுக்கம்பாறை
வேலூரை அடுத்த கணியம்பாடி காலனியில், மயான கொள்ளையை முன்னிட்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கினார்.
கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சேட்டு வரவேற்றார்.
அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 182 மாடுகள் பங்கேற்றது. 3500 பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.
விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்தனர்.
Related Tags :
Next Story