மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது


மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2022 11:59 PM IST (Updated: 6 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம், கிராமங்களில் அடிக்கடி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப் போவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு புகார்கள் வந்தது.

அவரின் உத்தரவுபடி வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று வாணியம்பாடி பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிைள நிறுத்தி அவர்களிடம் விசாரித்தனர்.

இருவரும் கோணாமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 23), ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்பு என்ற திவாகர் (24) என்றும் கூறினர்.

இருவரும் வாணியம்பாடி பகுதியில் பல இடங்களில் மோட்டார்சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story