சிறுவன் 1½ கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறு பின்னோக்கி நடந்து சாதனை


சிறுவன் 1½ கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறு பின்னோக்கி நடந்து சாதனை
x
தினத்தந்தி 7 March 2022 12:00 AM IST (Updated: 7 March 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுநீரக தொற்றால் பாதிப்படைந்த 5 வயது சிறுவன் 1½ கிலோ மீட்டர் தூரம் சிலம்பம் சுற்றியவாறு பின்னோக்கி நடந்து சாதனை புரிந்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த சகாயம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் மகன் ஜனோ பிராங்கிளின் (வயது 5). இவன் பிறந்தது முதலே சிறுநீரக தொற்று பாதிப்பால் 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளான். 

இவன் தனது 2½ வயதில் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து சிலம்பம் கற்று வந்தான். இவன் சில மாதங்களுக்கு முன்பு 12 பானைகள் மீது ஏறி தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தான். 

அதைத்தொடர்ந்து 30 பானைகள் மீது ஏறி நின்று தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் மற்றும் மான் கொம்பு சுற்றி சாதனை படைத்தான். 

தற்போது 3-வதாக ஜனோ பிராங்கிளின் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் சிலம்பம் சுற்றிக்கொண்டு பின்நோக்கி நடந்து சாதனை படைத்தான்.

 இதற்காக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இவனுடைய சாதனையை பதிவு செய்து ஒவ்வொரு நிகழ்வுக்கும் 3 ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றான். சிறுவனின் சாதனையை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story