திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மலை சுற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வருவாய்த்துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்த நிலங்கள் பார்வையிடப்பட்டன.
அந்த பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூலம் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு, தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் தொடங்கி 75-வது நாளான நேற்று சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை சுற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அண்ணாமலையார் மலையை சுற்றி, சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இதில் கலந்துகொண்டவர்கள், பாலியப்பட்டு ஊராட்சியில் சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும். இயற்கை வளங்கள், விளை நிலங்கள், குடியிருப்புகள், சுற்றுச்சூழலை அழித்து சிப்காட் வேண்டாம்.
அரசு மற்றும் தரிசு நிலங்களில் சிப்காட் அமைத்திட வேண்டும் என ஊர்வலமாக சென்றனர்.
போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story