மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x
தினத்தந்தி 7 March 2022 12:20 AM IST (Updated: 7 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தி.மு.க.சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 15 ஜோடி மாட்டு வண்டிகளும் என மொத்தம் 29 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெறுகிறது. பெரிய மாடு பிரிவில் முதல் பரிசான ரூ.1 லட்சத்து ஒன்றை அமைச்சர் ரகுபதி சார்பாக ஓடிய மதுரை மாவட்டம் அவனியாபுரம் எஸ்.கே.ஆர். மாட்டு வண்டியும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரத்து ஒன்றை தூத்துக்குடி மாவட்டம் சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரத்து ஒன்றை மதுரை மாவட்டம் கள்ளந்தரி ஐந்துகோவில் சாமிதுரை மாட்டு வண்டியும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து ஒன்றை திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டு வண்டியும் பெற்றது. சிறிய மாடு பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு வழங்கினார். பந்தயத்தை திருமயம்-மதுரை சாலையில் இருபுறமும் பொதுமக்கள் கூட்டமாக நின்று கண்டு ரசித்தனர்.

Next Story