காளைமாடு முட்டி தி.மு.க. பிரமுகர் படுகாயம்
காளைமாடு முட்டி தி.மு.க. பிரமுகர் படுகாயம் அடைந்தார்.
நொய்யல்,
புகழூர் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் கரூர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். நேற்று காலை 10 மணியளவில் ராஜ்குமார் தனது காளை மாட்டை தோட்டத்தில் கட்டுவதற்கு ஓட்டிச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளைமாடு அவரது வயிற்று பகுதியில் கொம்பால் குத்தியது.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story