புகார் பெட்டி
புகார் பெட்டி
வடிகால் வசதி
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 70-வது வார்டு வானமாமலை நகரில் மழை நீர் வடிகால் வசதி இல்லை. மழை பெய்தால் நீர் வௌியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்குகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்து நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.
கருப்பசாமி பாண்டியன், மதுரை.
பழுதடைந்த மின்விசிறி
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அன்னதான அரங்கு மற்றும் அதற்காக செல்லும் பாதையில் மின்விசிறிகள் பழுதடைந்துள்ளன. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கோடை காலம் வரும் நிலையில் பக்தர்கள் அன்னதானத்தை வியர்வை கொட்ட சாப்பிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மின்விசிறிகளை சரிசெய்ய வேண்டும். சிவா, மதுரை.
பராமரிப்பு பணி
மதுரை அலங்காநல்லூர் நல்லமநாயக்கர் தெருவில் பராமரிப்பு பணிக்காக பேவர்பிளாக் கற்கள் அமைக்க சாலை தோண்டப்பட்டது. இந்த சாலை குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் ஓட்ட சிரமப்படுகிறார்கள். பொதுமக்கள், குழந்தைகள் இந்த சாலையில் நடக்க கஷ்டப்படுகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
அசோக், அலங்காநல்லூர்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிக்கின்றன. இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றது. தெருநாய்களின் நடமாட்டத்தால் பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், சிங்கம்புணாி.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளது. இந்ந சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். தேங்கிய குப்பைகளில் பாம்புகள் போன்ற விஷப்பூச்சி நடமாட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டியினை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
Related Tags :
Next Story