மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் சார்பில் நெல்லை டவுனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புரட்சிகர இளைஞர் கழக தலைவர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தி அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும். பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story