கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்-இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்


கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்-இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 March 2022 1:45 AM IST (Updated: 7 March 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த இந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை:
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த இந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணி நெல்லை கோட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் தங்க மனோகர் தலைமை தாங்கினார். செயலாளர்கள் சக்திவேல், மிசாசோமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா வரவேற்றுப் பேசினார்.

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்து கொண்டு பேசினார்கள்.

மதமாற்ற தடை சட்டம்

கூட்டத்தில் பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆன்மிகவாதிகளை கட்சி சார்பற்று கோவில்களில் அறங்காவலர்களாக நியமனம் செய்ய வேண்டும். நெல்லையப்பர் கோவிலில் பாதுகாப்பு சுவரை சேதப்படுத்தும் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொதுச்செயலர் பிரமநாயகம், மாவட்ட தலைவர்கள் ராஜேஸ்வரன் (குமரி), ஆறுமுகசாமி (தென்காசி), தூத்துக்குடி மாநகர தலைவர் இசக்கிமுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் மதமாற்றம் மற்றும் மத மாற்ற பிரசாரங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணியாச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். தமிழகத்தில் உளவு பிரிவு போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். பல்வேறு செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சரியான அதிகாரியை நியமித்து அந்த அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story