தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2022 1:51 AM IST (Updated: 7 March 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி செட்டியார். இவரது மகன் மகேஷ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் அவரது மனைவியும், மகனும் இவரை விட்டு பிரிந்து சென்றனர். இதனால் மேலும் மது பழக்கத்துக்கு அடிமையான மகேஷ் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story