ஊர் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊர் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த சிறுவளூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சிறுவளூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது நிறைவடைந்து பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஊர் பெயர் அறிவிப்பு பலகையை தேசிய நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். ஆனால் புதுப்பாளையம் அருகே சிறுவளூர் செல்லக்கூடிய இடத்தில் ஊர் பெயர் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த ஊருக்கு வாகனங்களில் புதிதாக வருபவர்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும்போது ஊர் பெயர் பலகை இல்லாததால் பல்வேறு கி.மீ. தூரம் சென்று விடுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சிறுவளூர் செல்லும் வழித்தடத்தில் உடனடியாக ஊர் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story