முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 6 March 2022 8:39 PM GMT (Updated: 6 March 2022 8:39 PM GMT)

விருதுநகர் மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
மதுரை வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக மதுரைக்கு விமானத்தில் நேற்று வந்த அவர், அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மதுரை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் ெதன்னரசு, பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
விருதுநகர் மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பந்தல்குடிக்கு செல்லும் வழியில்  கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் அருப்புக்கோட்டை நகர ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இதேபோல் செல்லும் வழியில் சாலையோரம் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். 
சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு
அருப்புக்கோட்டை அருகே தூத்துக்குடி சாலையில் பந்தல்குடியில் ராம்கோ நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சூழல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்ததுடன், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். பூங்காவிற்குள் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்ட அவர், பின்னர் பேட்டரி கார் மூலமும் பூங்காவை பார்வையிட்டார். 
அவருடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.
முன்னதாக பூங்காவிற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, நிர்மலா வெங்கட்ராமராஜா, பி.வி. அபினவ் ராமசுப்பிரமணிய ராஜா, தலைமை செயல் அலுவலர் தர்மகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். 
தொழில் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த  நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story