குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 7 March 2022 2:10 AM IST (Updated: 7 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருநகரில் குழாய் உடைந்து குடிநீர் கடந்த 2 வாரமாக வீணாக ரோட்டில் ஓடுகிறது.

திருப்பரங்குன்றம்,
 
திருநகரில் குழாய் உடைந்து குடிநீர் கடந்த 2 வாரமாக வீணாக ரோட்டில் ஓடுகிறது.

குடிநீர்

 திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகே உச்சி கருப்பணசுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய ரோட்டின் நடுவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு குழாயில் பொருத்தப்பட்ட வால்வு திடீரென்று பழுதாகி விட்டது. அதனால் குடிநீர் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து வீணாகிக் கொண்டிருந்தது.
இது தொடர்பாக திருநகரில் உள்ள குடிநீர் வழங்கல் பிரிவு மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை

பெரும் பள்ளம்

இந்த நிலையில் பழுதான வால்வு பகுதியில் இரவு, பகலாக தண்ணீர் கசிந்ததையடுத்து உரிய இடமானது பெரும்பள்ளம் உருவாகி குடிநீர் வீணாக ரோட்டில் வழிந்தோடியது. மேலும் ரோடும் அரிப்பு ஏற்பட்டு சேதமானது. அதை எந்த அதிகாரியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
 இதற்கிடையே அதே பகுதியில் வெங்கடேஸ்வரா பிரதான சாலையில் ஒரு இடத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் சென்றவாறு இருந்தது.இதையும் மாநகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

மேடு-பள்ளமான ரோடு

இதனையடுத்து மாநக ராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள் உரிய இடத்தில் இரவு நேரத்தில் அவசர ரீதியில் பழுதான குழாயை சரி செய்தனர். ஆனால் பழுதை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை ஒரே சீராக மூடாமல் மேடும், பள்ளமாக விட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு பெரும் பள்ளங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story