கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் - குமாரசாமி கணிப்பு


கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் - குமாரசாமி கணிப்பு
x
தினத்தந்தி 7 March 2022 2:19 AM IST (Updated: 7 March 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கலபுரகி:

  கலபுரகியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

  கர்நாடக சட்டசபை தேர்தலை சந்திக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராகி வருகிறது. தேர்தலை சந்திக்கவும், கட்சியை வளர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பா.ஜனதா அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யாமல், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம். சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும், அதனை சந்திக்கவும் ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராக இருக்கிறது. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

  ஜனதாதளம் (எஸ்) கட்சியை தங்களது தேவைக்காக மட்டுமே பா.ஜனதாவும், காங்கிரசும் பயன்படுத்தி கொண்டு, தூக்கி எறிந்து விடுகின்றனர். சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். பா.ஜனதா ஆட்சிக்கு மறைமுக நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவ்வாறு ஆதரவு அளித்தால், இப்படியெல்லாம் பேச முடியாது. பா.ஜனதா ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள், மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளை சுட்டி காட்டியே பேசி வருகிறேன்.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story