போதைப்பொருட்கள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது


போதைப்பொருட்கள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2022 2:22 AM IST (Updated: 7 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருள் விற்றதாக நைஜீரியாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா போலீசாருக்கு தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ரோந்து சென்ற போது போலீசாரிடம் போதைபொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சிக்கினர். 

விசாரணையில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த உடே ஒஜா, எகக்சுக்வு டேனியல், பெங்களூருவை சேர்ந்த தஸ்லீம், முகமது உமர் என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 105 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story