கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 48 ஆயிரத்து 310 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனைகள் நடந்தது. இதில் பெங்களூரு நகரில் 146 பேர், துமகூருவில் 13 பேர், மைசூருவில் 12 பேர், பல்லாரியில் 7 பேர் உள்பட புதிதாக 229 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதுவரை 64 கோடியே 76 லட்சத்து 6 ஆயிரத்து 580 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 39 லட்சத்து 42 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரில் 2 பேர், கலபுரகியில் ஒருவர் என மேலும் 3 பேர் இறந்தனர். 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 ஆயிரத்து 991 பேர் இறந்து உள்ளனர். நேற்று 264 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 38 லட்சத்து 99 ஆயிரத்து 298 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 248 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 0.47 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.31 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story