இறந்து கிடந்த புள்ளிமான்
கள்ளிக்குடி அருகே புள்ளிமான் இறந்து கிடந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழி சாலையில் கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டை நான்குவழி சாலை மருதுபாண்டியர் சிலை அருகே 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் 2 கால்களும் ஒடிந்த நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். மேலும் இறந்த புள்ளிமானின் இடதுபக்க கால்கள் உடைந்த நிலையில் இறந்து கிடந்ததால் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இறந்ததா? அல்லது வயல்வெளியில் வைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்ததா? என விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story