சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்


சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 7 March 2022 2:32 AM IST (Updated: 7 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது

துவரங்குறிச்சி
திருநெல்வேலியிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.  துவரங்குறிச்சி அருகே உள்ள சடைவேலம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. காருக்குள் இருந்த 4 பேர் சிக்கிக் கொண்டு தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story