கொண்டலாம்பட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


கொண்டலாம்பட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2022 2:42 AM IST (Updated: 7 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேம்படிதாளம், நெய்க்காரப்பட்டியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்க்காரப்பட்டி மலங்காட்டை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 40), அம்மாசி (54) மற்றும் நடுவநேரியை சேர்ந்த செல்வராஜ் (57) ஆகிய 3 பேரும் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story